முஸ்லீம் பகுதி பாதுகாப்பானது அல்ல.! திரைப்பட இயக்குனருக்கு TMC எம்எல்ஏ பதிலடி..!

முஸ்லீம்கள் இருக்கும் பகுதி. பாதுகாப்பில்லை என கூறி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி புத்தக விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக டிவீட் செய்துள்ளார்

முஸ்லீம்கள் இருக்கும் பகுதி. பாதுகாப்பில்லை என கூறி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி புத்தக விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக டிவீட் செய்துள்ளார் .

காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி, நேற்று (ஏப்ரல் 20) மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள குவெஸ்ட் மாலில் தனது ‘அர்பன் நக்சல்ஸ்’ என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்த வர இருந்தார். இறுதியில் அந்த இடமானது, ஸ்டார்மார்க் புத்தகக் கடை, சவுத் சிட்டி மாலுக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து. இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில், நான் புத்தக நிகழ்வில் கலந்துகொள்ள இருந்த பகுதி, முஸ்லிம் பகுதி என்றும், இது பாதுகாப்பானது அல்ல என்று தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். அக்னிஹோத்ரியின் இந்த ட்வீட்டுக்கு மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பாபுல் சுப்ரியோ பதிலளித்தார்.

அதில், அன்புள்ள விவேக் அனிஹோத்ரி, நீங்கள் எனது திரையுலக சக ஊழியர் மற்றும் உங்கள் மனைவி பல்லவிஜி எனக்கு நீண்ட காலமாக நன்கு தெரிந்தவர், குவெஸ்ட் மால் எனது எம்எல்ஏ தொகுதியான பாலிகங்கில் உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக அங்கிருந்து நிகழ்வு மாற்றப்பட்டதாக அறிந்தேன். நீங்கள் ஒரு நாள் முன்னதாக கொல்கத்தாவுக்கு வர வேண்டும்.  தனிப்பட்ட முறையில் பாதுகாப்பான புத்தக வெளியீட்டை தான் ஏற்பாடு செய்து தருவாகாகவும், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பாபுல் சுப்ரியோ பதில் அளித்துள்ளார். .

unknown node
முஸ்லீம் பகுதி பாதுகாப்பானது அல்ல.! திரைப்பட இயக்குனருக்கு TMC எம்எல்ஏ பதிலடி..!