#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

A case has been filed in the Chennai High Court seeking postponement of the local body elections due to the spread of corona.

சென்னை:கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது,கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக வருகின்ற ஜன.22 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!