தமிழகத்தில் குடியரசு தினம்,தொழிலாளர் தினம்,சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் மட்டுமே,கிராம சபை கூட்டம் 4 முறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி,தமிழகத்தில் ஜனவரி 26,மார்ச் 22,மே 1,ஆக.15,அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.மேலும்,சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி,
சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும்,
உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.