தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்: “நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை […]
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்த […]
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா,கருணாநிதி படத்திறப்பு […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனிடையே,பல்வேறு புதிய அறிவுப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,நறுமணப் பூக்களைப் பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் […]
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு நிலை,காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து,சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. முதலைமைச்சரின் […]
திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி, அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,படிப்படியாக […]
கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,கஞ்சா மற்றும் கத்தியுடன் விக்னேஷ்,சுரேஷ் என்பவர் பிடிபட்ட நிலையில்,அதன்பின்னர்,போலீஸ் விசாரணையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,அரசு […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள். மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் […]
தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து,பின்னர்,புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். மேலும்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்த) சட்ட முன்வடிவு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு நவீன படகுகள் வாங்குவது குறித்து […]
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேதான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் […]
சட்டப்பேரவையில் இன்று கைத்தறித்துறை மற்றும் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,மானியக்கோரிக்கை மீது கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குறிப்பாக,அரியலூர் சிமெண்ட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவுள்ளனர். குறிப்பாக போலி பட்டாக்கள் பதிவு செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் […]
சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: இதனைத் தொடர்ந்து,இந்த சூழலில்,சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக அதிமுக சார்பில் ஈபிஎஸ் தமிழக […]
தமிழக சட்டப் பேரவையில் மின்சாரத்துறை,தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறுகையில்:”5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்,மகளிருக்கும் […]
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும், ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் பதில் அளித்தார்.குறிப்பாக,அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாகவும் கூறினார்.இதனையடுத்து,அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது. இந்த […]
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. ஈபிஎஸ் கேள்வி: ஆனால்,இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை […]
தமிழகத்தில் குடியரசு தினம்,தொழிலாளர் தினம்,சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் மட்டுமே,கிராம சபை கூட்டம் 4 முறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,தமிழகத்தில் இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,தமிழகத்தில் ஜனவரி 26,மார்ச் 22,மே 1,ஆக.15,அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.மேலும்,சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் […]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அவர்கள் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி அவர்களின் காரில் ஏற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி […]