5 மாநில தேர்தல் -பிரதமர் தலைமையில் ஆலோசனை..!

Prime Minister Modi has attended the BJP Election High Level Committee meeting in Delhi on the occasion of the 5th state assembly elections.

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய  5 மாநிலங்களில் சட்டசபை  தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை தொடந்து பாஜக வகுத்து வருகிறது.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பாஜக தேர்தல் உயர்நிலை குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று தொகுதி பங்கீடு நிலவரங்கள் குறித்து மோடியிடம் கூறிவருகின்றனர்.

மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.