2024 நாடாளுமன்ற தேர்தல் தான் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு பவள விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கிடப்பில் வைத்து விட்டு, இறுதியில் மாநில அரசுக்கு உரிமை இல்லை என ஆளுநர் கூறுவது குறித்து முதல்வர், ஆளுநரை விமர்சித்து பேசியிருந்தார். முதல்வர் கூறியதாவது, இந்த சாதாரண சட்டத்தை நிறைவேற்றும் உரிமையில்லாத மாநிலத்திற்கு தான் ஒருவர் ஆளுநர் பொறுப்பில் இருக்கிறார் என விமர்சித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்டம் உடனே நிறைவேறும், ஏழை மாணவர்கள் மருத்துவ கனவை கலைக்கும் நீட் தேர்வு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவார்கள், இந்தியை திணிப்பார்கள் ஆனால், உயிர்கள் பலியாகும் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற மறுப்பார்கள்.
இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் முற்றுப்புள்ளியாக அமையும், வரும் 2024 தேர்தலில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும், அந்த தேர்தலில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து வெற்றி பெற்று திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுதும் கொண்டு செல்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.