கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,757 பேர் உயிரிழப்பு...! 2,56,947 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

1,757 deaths in India in last 24 hours Corona affects 256,947 people

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 256,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,56,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 15,314,714 உயர்ந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,86,276 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 1,757 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180,550. ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்1,52,356பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,31,06,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (3,898,262), கேரளா (1,239,424), கர்நாடகா (1,161,065), தமிழ்நாடு (991,451), மற்றும் ஆந்திரா (962,037).