இது என்னடா புது காதலா இருக்கு! சூட்கேஸை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!

The incident, in which a 24-year-old woman from Russia, Rhine Jordan, was married to a suitcase, took many by surprise and shock.

ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண்  சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இன்று திருமணம் என்பது பல வினோதமான முறைகளில் எல்லாம் நடைபெறுகிறது. அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம் பெண்  சூட்கேஸை திருமணம் செய்துள்ள சம்பம் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.  ஜார்டானுக்கு  சிறுவயது முதலே பொருட்களின் மீது ஈர்ப்பு உள்ளதாகவும், இந்த சூட்கேஸ் மீது தன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஒரு ஆண் மீது விருப்பம் இருந்தது. ஆனால் தற்போது சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டு உள்ளேன். அதனால் தான் அதனை திருமணம் செய்து கொண்டேன். மனிதர்களைவிட பொருட்களுடன் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கணவனான சூட்கேஸை 2015ஆம் ஆண்டு முதன் முதலாகப் பார்த்தேன்.

ஒரு போட்டோ ஷூட்காக கடையில் அதை வாங்கினேன் என்றும் தெரிவித்தார். முதல் முறை பார்க்கும் போதே காதலில் விழுந்து விட்டேன். எனது கணவர் பெயர் ஜிடியான். நான் அவருடன் பேசுவேன். அவர் பேசுவதையும் நான் கேட்பேன். எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழும் என்றும், அவர் வெறும் துணை மட்டுமல்ல. நல்ல கணவர். நல்ல நண்பர். ஆனால் மக்கள் பலர் என்னை புரிந்து கொள்ளவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சை எடுக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு புரியாத ஒன்றை வைத்து மனிதர்களை தீர்மானிக்க கூடாது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.