சில வீடியோக்கள் உடனே வைரலாகும். சில வீடியோக்கள். காலம் எடுத்துக்கொண்டு, சரியான நேரத்தில் உலகத்தைத் தாக்கும். அப்படி தான் இப்போது, 2007-ல் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரி-யின் பென்குயின் வீடியோ தான் இணையத்தை ஆக்கரமித்துள்ளது.
இந்த வீடியோ எங்கிருந்து வந்தது?
2007-ஆம் ஆண்டு வெளியான Encounters at the End of the World என்ற டாக்குமெண்டரி, அண்டார்டிகாவில் வாழும் மனிதர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் இயக்குநர் Werner Herzog. படம் வெளியான போது பல விஷயங்கள் பேசப்பட்டாலும், அதில் இடம்பெற்ற ஒரு சிறிய பென்குயின் காட்சி அப்போது பெரிதாக கவனிக்கப்படவில்லை என்று சொல்லலாம்.
வீடியோவில் நடந்தது என்ன?
சில பென்குயின்கள் எல்லாம் கூட்டமாக கடலுக்குப் போகின்றன. அங்கு உணவு கிடைக்கும். ஆனால் ஒரு பென்குயின் மட்டும் நின்றுவிடுகிறது. அது கடலை நோக்கி போகாமல், திரும்பி எதிர் திசையில் (மலையை நோக்கி) தனியாக நடக்க ஆரம்பிக்கிறது. அந்த மலை 70–80 கி.மீ. தூரத்தில் இருக்கும். அந்தப் பாதையில் உணவும் இல்லை, உயிர் வாழ வாய்ப்பும் குறைவு. அதாவது அங்கு சென்றால் உயிரோடு வாழமுடியாது என்று தெரிந்தும் அந்த பயணத்தை தேர்வு செய்து தைரியமாக அந்த மலையை நோக்கி நடந்தது.
இயக்குநர் என்ன சொன்னார்?
இந்த வீடியோவை பார்த்த பலரும் பென்குயின் என்ன செய்கிறது எதற்காக இப்படி செய்கிறது என்கிற பல விதமான கேள்விகளை கேட்கத்தொடங்கிவிட்டார்கள். அந்த காட்சியை படமாக்கிய இயக்குநர் Werner Herzog அந்தக் காட்சியைப் பார்த்துகூறுகையில் ” இது ஒரு மரணத் தீர்ப்பு (death sentence). அந்தப் பென்குயின் தன்னை அழிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டது” என தெரிவித்தார்.
ஏன் இப்போது திடீரென வைரலானது?
2007-ல் வெளியான ஆவணப்படத்தில் இந்த பென்குயின் காட்சி வந்தது. அப்போது YouTube புதிதாகத் தொடங்கியிருந்தது, ஆனால் இப்போது இருப்பது போல வேகமாக வீடியோ பரவும் வசதி இல்லை. 2010-ல் யாரோ “Depressed Penguin” என்று போட்டபோது சில ஆயிரம் பேர் மட்டுமே பார்த்தார்கள். Facebook, Twitter போன்றவை இருந்தாலும், 5–10 வினாடி கிளிப்புகளை Reels, Shorts போல உடனே பரப்பும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. மக்கள் இந்த உணர்வில் (வாழ்க்கை குழப்பம், கூட்டத்தை விட்டு தனியாகப் போக வேண்டும் என்ற எண்ணம்) அவ்வளவு ஆழமாக இருக்கவில்லை. அதனால் காட்சி சின்ன அளவில் மட்டுமே பரவியது.
Instagram Reels, YouTube Shorts, TikTok போன்றவை 15–60 வினாடி வீடியோக்களை மிக வேகமாக பரப்புகின்றன. அப்படி தான் யாரோ அந்த 5–10 வினாடி காட்சியை எடுத்து, “Depressed Penguin”, “Rebel Penguin”, “Lost Penguin”, “When life feels meaningless” போன்ற உணர்ச்சிகரமான தலைப்புகளோடு போட்டார்கள். ஒருவர் பார்த்தால் உடனே அவருடைய Followers-க்கு போய்விடும். அவர்களிடமிருந்து அடுத்த 1000 பேருக்கு… இப்படி வேகமாக பரவியது. இணையத்தில் memes, status, WhatsApp forward ஆக மாறியது. இதனால்தான் 18 ஆண்டுகள் பழைய காட்சி இப்போது கோடிக்கணக்கில் பார்க்கப்படுகிறது.
இன்றைய இளைஞர்கள் (மற்றும் பல வயதினரும்) இப்படிப்பட்ட உணர்வில் இருக்கிறார்கள்: எல்லோரும் ஒரே வேலை, ஒரே routine, ஒரே பாதையில் போகிறார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒரு குரல்: “இதுதானா வாழ்க்கை? இதற்காகவா நான் படித்தேன், உழைக்கிறேன்?” “எல்லோரும் ஒரு பக்கம் போகிறார்கள்… ஆனால் எனக்கு அந்தப் பாதை பிடிக்கவில்லை.” “நான் தனியாகப் போனால் என்ன ஆகும்?” இந்த குழப்பம், மன அழுத்தம், burnout இப்போது மிக அதிகம். அந்த உணர்வுக்கு இந்த பென்குயின் சரியான உருவகமாக (mirror) ஆகிவிட்டது. அதனால்தான் மக்கள் “இது நான்தான்!” என்று சொல்லி ஷேர் செய்கிறார்கள்.
அறிவியல் என்ன சொல்கிறது?
பென்குயின்கள் பொதுவாக ஒருபோதும் தனியாக இப்படி நடப்பதில்லை. அவை எப்போதும் கூட்டத்தோடு ஒட்டிக்கொண்டு, உணவு தேடி கடலுக்குச் செல்லும். ஆனால் சில அரிதான சமயங்களில், திசை உணர்வு குழம்புதல், நரம்பியல் பிரச்சினைகள், பராசைட் தொல்லை அல்லது மூளை சம்பந்தப்பட்ட சிறு கோளாறு போன்ற காரணங்களால் அவை கூட்டத்தை விட்டு வெகுதூரம் செல்லலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஆனால் இந்தக் குறிப்பிட்ட பென்குயின் விஷயத்தில் விஞ்ஞானி டேவிட் ஏன்லி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார்: “அதைப் பிடித்து மீண்டும் கூட்டத்துக்குள் விட்டாலும், அது உடனே திரும்பி அதே மலையை நோக்கித்தான் நடக்கும்.” அதாவது இது வெறும் தவறோ அல்லது திசை குழப்பமோ அல்ல; அந்தப் பென்குயின் வேண்டுமென்றே, தன்னுணர்வோடு அந்தத் திசையைத் தேர்ந்தெடுத்து நடக்கிறது போலத் தெரிகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். இதுவே இந்தக் காட்சியை மிகவும் சுவாரஸ்யமாகவும், தத்துவார்த்தமாகவும் மாற்றியுள்ளது.
