கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!
இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த மருந்துவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை.

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம், திடீரென ஒரு கார் ஒன்று சந்தையில் நுழைந்து வேண்டுமென்றே அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது.
இந்த கொடூரமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 68 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அகதிகளாக பலரை அனுமதித்தத போது இந்த தீவிரவாதி உள்ளே வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதே சமயம் இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த தீவிரவாதி சவுதி அரேபிய தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இன்னுமே விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து Saxony-Anhalt தலைவர் ரெய்னர் ஹெசெலோஃப் கூறும் போது ” இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெரியவர் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர், காயமடைந்தவர்களில் 15 பேர் கடுமையான காயங்களுடன், 37 பேர் லேசான காயங்களுடன், 16 பேர் சிறிய காயங்களுடன் இருந்தனர்.
அவசரக் குழுக்கள், 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் உட்பட, மருத்துவ உதவி வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்” எனவும் தகவலை தெரிவித்தார். விசாரணை முடிந்த பிறகு அந்த நபர் யார்? எதற்காக இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதற்கான விவரம் தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025