விஜய் தேவரகொண்டா கூட டூர் போன என்னங்க தப்பு..? ராஷ்மிகா மந்தனா காட்டம்.!

Default Image

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சமீபகாலமாக டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக இந்த (2023) புத்தாண்டு அன்று இருவரும் மாலத்தீவிற்கு தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள்.

Vijay Deverakonda And Rashmika Mandanna
Vijay Deverakonda And Rashmika Mandanna [Image Source : Twitter]

அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது. எனவே இதன் காரணமாகவே ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவில் ஒன்றாக இருக்கிறார்களா..? என்பது போல கேள்வி எழுந்து வந்தது. மேலும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் பலர் கூறினார்கள்.

Rashmika Mandanna About Vijay Deverakonda
Rashmika Mandanna About Vijay Deverakonda [Image Source : Twitter]

இதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்த ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் இது குறித்து பேசிய ராஷ்மிகா “விஜய் தேவரகொண்டா என்னுடைய நண்பர். எனவே நான் அவருடன் சுற்றுப்பயணம் செல்வதில் என்னங்க தவறு..? என சற்று கடுப்பாகியுள்ளார்.

Vijay Deverakonda Rashmika Mandanna
Vijay Deverakonda Rashmika Mandanna [Image Source : Twitter]

மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் தேவரகொண்டா குஷி திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்