வாக்களிக்க முடியாமல் போனது ஏன்? விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி!

தேர்தல் நாளில் நடந்து இதுதான் இதன் காரணமாக தான் வாக்களிக்க முடியாமல் போனது என அதற்கான காரணத்தை பற்றி செந்தில்பாலாஜி பேசியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளில் (ஏப்ரல் 23, 2026) தனது வாக்கைப் பதிவு செய்ய முடியாமல் போனது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விரிவான விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது“சார், நான் அன்றைக்கு வந்து வாக்களிக்கணும்னு தான் நினைச்சேன். மூன்று மணிக்கு மூன்று முப்பதுக்குள்ள புறப்பட்டு, நம்ம போய் அங்க வாக்களிக்கணும்னு தான் திட்டமிட்டிருந்தேன்.

வாக்களிப்பது என்னுடைய கடமை என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்றபோது, சில இடங்களில் அதிமுகவினர் ஏற்கனவே பூத்துக்குள் இருந்தனர். Agent இல்லாத இடங்களிலும் அவர்கள் உள்ளே இருந்தனர். எங்கள் Agentகள் சுட்டிக்காட்டினாலும், அவர்களை வெளியேற்ற முயற்சி எடுத்தாலும், அவர்கள் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பிரச்சனை உருவாக்க முயன்றனர்.

கடைசி இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மறியல் செய்தனர். மாவட்ட ஆட்சியரிடம் சென்று தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். இந்தப் பரபரப்பான சூழல் காரணமாகவே, நான் வாக்களிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது” என்று செந்தில்பாலாஜி விளக்கினார்.

இந்த விளக்கத்தின் மூலம், தேர்தல் நாளில் தனக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அதிமுகவினரின் செயல்பாடுகளே காரணம் என்று அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அன்று செந்தில் பாலாஜி வாக்களிக்காமல் இருந்தது பெரும் விமர்சனமாக வெடித்த நிலையில், இப்போது செந்தில் பாலாஜி இது பற்றி பேசியிருப்பது பதிலடியாக அமைந்துள்ளது.