சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக இன்று (ஜனவரி 17) உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதைப்போலவே இன்று சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்கிற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கர் காலை முட்டியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை கான பலரும் வருகை தந்தனர். அப்போது மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது காளை மோதியதில் பார்வையாளராக வந்திருந்த சிறுவன் பாஸ்கர் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
இளைஞர் ஒருவரும் போட்டியை பார்ப்பதற்கு வருகை தந்திருந்த நிலையில், காளை முட்டியதில் அவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சிராவயல் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாடுபிடி வீரர்களும் இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அவர்கள் தற்போது சிகிச்சைக்காக திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025