இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமான போக்கைக் காட்டி வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சற்று குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, பின்னர் அதிரடியாக உயர்ந்தது. நேற்று வரை ஏறுமுகத்தில் இருந்த விலை, இன்று திடீரென சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. சவரனுக்கு 872 ரூபாய் குறைந்து 1,30,472 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 109 ரூபாய் குறைந்து 16,309 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கும், ஒரு கிலோ 10,000 ரூபாய் குறைந்து 3,05,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டிருந்தது. தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பலரும் காத்திருந்த நிலையில், இன்று ஏற்பட்ட விலைக் குறைவு அவர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. “இப்படியே விலை குறைந்து கொண்டே போனால் நல்லது” என பலரும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

உலகப் பொருளாதார நிலை மற்றும் புவி அரசியல் பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.அடுத்த சில நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த தெளிவான போக்கு இன்னும் உறுதியாகவில்லை. எனவே, தங்கம் வாங்குவோர் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிக்குமாறு பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.