சென்னை : தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்று (ஏப்ரல் 10, 2026) சற்று குறைந்துள்ளது.இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,12,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.14,100-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
5-ஆம் தேதியில் இருந்து ஒரு நாள் விலை உயர்வதும், மறுநாள் குறைவதுமாக மாறி மாறி காணப்பட்டது. நேற்று முன்தினம் விலை குறைந்திருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 9) ஒரு கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ரூ.14,125-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,13,000-க்கும் விற்கப்பட்டது.
ஆனால் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ (பார்) வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.
இந்த ஏற்ற இறக்கம், திருமணம், விழாக்கள் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தை மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் புவியியல் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் மாறுபடுவதால், வாங்குவதற்கு முன் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
