மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...!இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி..!

The Government of Tamil Nadu has given permission to operate Tasmac stores in Tamil Nadu from 10 am to 8 pm from today.

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,வரும் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது,தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11  மாவட்டங்களை தவிர,மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை இயங்கி வந்தன.

இந்நிலையில்,இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர,மற்ற அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.