சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.77அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் தங்கம், வைரம், வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 என அதிகரித்துள்ளது.
unknown nodeநிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 அதிகரித்த நிலையில் தற்பொழுது மேலும் ரூ.55 அதிகரித்து, மொத்தமாக ரூ.77 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,360-லிருந்து ரூ.5,415 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 அதிகரித்த நிலையில் கூடுதலாக ரூ.264 அதிகரித்து, மொத்தமாக ரூ.440 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.42,880 லிருந்து ரூ.43,320-க்கு விற்பனையாகிறது.
unknown nodeமேலும் பட்ஜெட் தக்கலையடுத்து வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1.20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1200அதிகரித்து ரூ.76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.