அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் : விசாரணை நடத்த முடிவு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார்.குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.

எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில்  விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்சூரப்பாமீது ரூ.280 கோடி வரை நிதி மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.முகாந்திரம் இருந்தால்அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்சூரப்பாமீது விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஆடிட்டர் துணையுடன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்சூரப்பாமீது விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் சூரப்பா மீது புகார் அளித்தவர்களையும் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.