சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்திருக்கேன் வாங்க சார்…! கதறி அழும் ரசிகை! வைரலாகும் வீடியோ!
சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்திருக்கேன் வாங்க சார், உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு.’ என கண்ணீர் விட்டு கதறி அழும் ரஜினி ரசிகை.
சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்து, தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், இன்று இவர் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம், ரஜினியின் ராசிக்கார்கள் பலர், அவரது இல்லத்தின் முன்பாக திரண்டுள்ளனர். அதில் ரஜினி ரசிகை ஒருவர், ‘சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்திருக்கேன் வாங்க சார், உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு.’ என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ரஜினியை காண காத்திருந்த ரசிகை அழும் காட்சி..!#Rajinikanth | #Rajini | #RajinikanthBirthday | #HappyBirthdayThalaivaa | @rajinikanth pic.twitter.com/iOQmEMiEND
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 12, 2020