சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

Shivshankar Baba, who was arrested on a sexual harassment charge, has been remanded in custody for 15 days.

பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இதுவரை இவர் மீது 18 முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 2 போக்சோவில் பதிவாகியுள்ளது. மேலும், மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.