சிவசங்கர் பாபா மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல்!

The investigation has revealed that Sivashankar Baba forcibly abused the students.

சிவசங்கர் பாபா மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்.

தற்பொழுதும் இது குறித்ததான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2011, 2012 மற்றும் 2013 இல் படித்த சுஷில்ஹரி பள்ளியின் மாணவிகளை சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவர் மீதான இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.