அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.!!

தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம்

Gold Rate

தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை. கிராமிற்கு 35 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 77.70 -க்கும், கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.