எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்?

It has been reported that actor Rajinikanth's party will start on January 17, the birthday of former chief minister MGR.

நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த பிறந்தநாளான ஜனவரி 17 ஆம் தேதி கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் தாம் கட்சி தொடங்குவதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் இம்மாதம் 31 ஆம் தேதியில் கட்சி குறித்த அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த பிறந்தநாளான ஜனவரி 17 ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி மதுரையில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.