40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி- வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ள கமல்ஹாசன்

This news gives information about Kamal Hassan to release the list of candidates in 40 constituencies

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் .இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகராக இருந்து மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை ஒரு வருடம் ஆகிறது . இந்த கட்சியை ஆரம்பித்து ஒரு வருடமாக கடுமையான களப் பணிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன் .

இந்நிலையில் அந்த கட்சியில் அதிருப்தி குரல்கள் எழுந்து வருகிறது .தற்போது வரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகியுள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் களத்தில் ஒரு மாதிரியாகவும் கட்சிக்குள் ஒரு மாதிரியாகவும் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்து பலரும் விலகியுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் சார்பில் 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.