இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை...!

In Chennai, 22 carat jewelery gold prices fell by Rs 360 to Rs 44,040 per bar today.

Gold Rate

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து 44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. அந்த வகையில், தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து 44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.45 குறைந்து ரூ. 5,505 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.