மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி மாயம்....! போலீசார் வலைவீச்சு...!

A 60-year-old woman from Usilampatti, who was admitted to the Government Rajaji Hospital in Madurai for corona treatment, is currently unconscious.

மதுரையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில், உசிலம்பட்டியை சேர்ந்த 60 வயதான மூதாட்டி, கொரோனா சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், மதுரையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில், உசிலம்பட்டியை சேர்ந்த 60 வயதான மூதாட்டி, கடந்த 20-ம் தேதி கொரோனா சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மூதாட்டி திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார்.

மூதாட்டியை அவரது உறவினர்கள் தேடி அழைத்துள்ளனர். ஆனால், மூதாட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின் புகாரின் அடிப்படையில், மாயமான மூதாட்டியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.