தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு...கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு, ஒரு கிராம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை

Hero Image

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், நேற்று (ஏப்ரல் 8) அதிரடியாக உயர்ந்திருந்த விலை, இன்று (ஏப்ரல் 9) மீண்டும் குறைந்துள்ளது.இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,12,000-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று மட்டும் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கும் விற்கப்பட்டிருந்தது. இன்று இந்த உயர்வு முழுவதும் குறைந்து, விலை சற்று தளர்ச்சியடைந்துள்ளது.

18 காரட் தங்கம் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.11,650-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.93,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்தை காட்டி வருகிறது. நேற்று பெரிய அளவில் உயர்ந்திருந்த விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஏற்ற இறக்கம், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தை மாற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் புவியியல் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கம் வாங்குவதற்கு முன், சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.