சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி...!

A man who was receiving treatment for a corona infection at a private hospital in Kalambakkam next to Chennai committed suicide by hanging himself.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்குநாள் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் தற்போது பல புதிய கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக, சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த ஒருவர், கடந்த 16-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அந்த நபர் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.