குழந்தை விற்பனை :கைதான 3 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
குழந்தை விற்பனை தொடர்பாக 3 பேருக்கு மே 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இதில் பர்வீன் ஹசீனா, அருள்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். பின் இந்த மூன்றுபேரும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 3 பேரையும் மே 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.