"10 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"- வானிலை மையம்!

The Met Office has forecast light to moderate rain with thunder and lightning in 10 districts in the next 24 hours.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் 2 நாட்களுக்கு வட மாவட்டங்களை உள்ளடக்கி 22 மாவட்டங்களில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.