அங்கித் திவாரியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர்

Featured image

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோதுதிண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.

15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் விடாது.. வானதி சீனிவாசன்..

இந்த நிலையில்,  3 நாள் காவல் கோரி போலீஸ் தாக்கல் செய்த மனு  இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அமலாக்கத்துறை அதிகாரிஅங்கித்திவாரி  திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.