தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல காரணமாக,தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeசென்னையை பொறுத்தவரை:
வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
unknown nodeமீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் நான்கு நாட்களுக்கு,தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள்,மத்திய கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
unknown nodeஎனவே,மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 18, 2022