"ராஜவம்சம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Developed by Sasikumar acting The official announcement has been made that the movie Raja Vamsam will be released in theaters on March 13.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜா வம்சம் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம் புலி, மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத் துள்ளார். மேலும் இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆம், இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது சசிகுமார் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துள்ளார்கள்.

unknown node