காதலுக்கு பெற்றோர் எதிர்த்ததால் பாலிடெக்னிக் மாணவி தற்கொலை.!

எட்டயபுரதில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காமாட்சி பிரியா என்ற 18வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

எட்டயபுரதில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காமாட்சி பிரியா என்ற 18வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

எட்டயபுரம் அருகில் நம்பிபுறம் கீழ் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் கேரளா மாநிலத்தில் உள்ள பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இவருடைய மகள் காமாட்சி பிரியா 18 வயதான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாவது படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய உறவினர் ஒருவரை காதலித்ததாகவும், அது அவரது பெற்றோருக்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப் படுகிறது, இதனால் மனமுடைந்த மாணவி காமாட்சி பிரியா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் எட்டயபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இந்த நிலையில் மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எட்டையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் , தற்கொலை செய்த காமாட்சி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

காதலுக்கு பெற்றோர் எதிர்த்ததால் பாலிடெக்னிக் மாணவி தற்கொலை.!