மாணவனை கடத்தி 5 லட்சம் கேட்ட மர்ம கும்பல் கைது.!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே வசித்து வருபவர் தங்கராஜ். தங்கராஜ் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நவஜீவன் என்ற மகன் உள்ளார்.

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே வசித்து வருபவர் தங்கராஜ். தங்கராஜ் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நவஜீவன் என்ற மகன் உள்ளார். நவஜீவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நவஜீவன் தனது ஓட்டல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்து காரில் கடத்தி சென்றனர். அப்போது அவரின் தந்தை தங்கராஜிற்கு கால் செய்து மர்ம நபர்கள் உங்கள் மகனை கடத்தியதாகவும் 5 லட்சம் கொடுத்தால் உயிருடன் திரும்பி கிடைப்பார் என்று கூறியுள்ளனர்.

மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார், மேலும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகள், மற்றும் காரின் நம்பர் மற்றும் மர்ம நபர்கள் பேசிய செல்போன் நம்பரை வைத்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் அந்த விசாரணையில் நவஜீவனை கடத்தி சென்ற கார் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்ததும் உடனடியாக காவல்துறையினர் விரைவாக அந்த மர்ம கும்பலை தேட தேட தொடங்கினர். அந்த மர்ம நபர்களை செங்கல்பட்டு ரோட்டில் காரில் செல்லும் பொழுது மடக்கிப்பிடித்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்து நவஜீவனை பத்திரமாக மீட்டு தனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.