"ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்"- மதுரை கிளை நீதிமன்றம்!

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது.

பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது.

தமிழகத்தில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த சிலுவை என்பவர், மாடுறது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய மத்திய, மாநில அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், இந்த சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் எனவும், வேலை இல்லாத இளைஞர்கள் பலரின் நேரம் மற்றும் சிந்தனை இதனால் பாதிக்கப்படுகிறது என கூறி இந்த வழக்கை முடித்தார்.