கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய விஜய் மக்கள் நிர்வாகிகள்!

Vijay People's Movement executives have urged Chief Minister Binarayi Vijayan to open theaters in Kerala as the master film is out.

மாஸ்டர் படம் வெளியாக உள்ளதால் கேரளாவில் திரையரங்குகளை திறக்க முதல்வர் பினராயி விஜயனை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில். அதற்குப் பின் இவரது நடிப்பில் 64 ஆவது படமாக மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

இப்படமானது 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆதலால் 100 சதவீத இருக்கைகளுடன் கூடிய திரையரங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என படக்குழுவினர் முதல்வரை சந்தித்துப் பேசினார். மலையாளத்திலும் இப்படம் வெளியாகும் நிலையில், கேரள முதல்வருக்கு விஜய் மக்கள் நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளதால் கேரளாவில் திரையரங்குகளை திறக்க முதல்வர் பினராயி விஜயனை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.