உத்தராகண்ட் வெள்ளம் : மேலும் இரண்டு உடல்கள் மீட்பு

Uttarakhand disaster: Toll rises to 67 as two more bodies recovered

உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள பனிச்சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.மீட்புப்பணிகள்  தொடர்ந்து  15 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தபோவன்-விஷ்ணுகாட்   இடத்திலிருந்து மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 137 பேர் இன்னும் காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.