தேசிய விருது பெற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் – மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு..!

The Union Ministry of Education has issued an order directing teachers to apply for the National Best Teachers Award

தேசிய நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு அந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில்,மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இன்று முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி,ஆசிரியர்கள்https://nationalawardstoteachers.education.gov.in/என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.