பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 357 புள்ளிகள் அதிகரித்து 58,258 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,143 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 58,268 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 357 புள்ளிகள் அல்லது 0.62% என அதிகரித்து 58,258 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 99.95 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 17,143 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,900 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,043 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல் லிமிடெட், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், நெஸ்லே இந்தியா, எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.