சற்று நிம்மதி...இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Some relief ... Less than 30,000 daily corona exposure in India ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 252 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,04,534 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,35,04,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 252 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,45,385 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,469 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,09,575 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 81,85,13,827 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,96,46,778 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.