பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 380 புள்ளிகள் அதிகரித்து 61,655 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,118 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 61,566 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 380.85 புள்ளிகள் அல்லது 0.62% என அதிகரித்து 61,655 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 102 புள்ளிகள் அல்லது 0.57% அதிகரித்து 18,118 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,275 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,015 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன், திவிஸ் லேபரட்டரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹீரோ மோட்டோகார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.