பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து 61,032 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,845 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,550 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 600 புள்ளிகள் அல்லது 0.99% என அதிகரித்து 61,032 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 158.95 புள்ளிகள் அல்லது 0.89% அதிகரித்து 17,929 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ஐடிசி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
என்டிபிசி லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
யுபிஎல் லிமிடெட், ஐடிசி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் (Special Economic Zone), அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஐச்சர் மோட்டார்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.