ஐயோ.. கடவுளே..நாயை கொடூரமாக தாக்கிய பெண்…பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஒரு பெண் நாயை அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, விலங்குகள் நல அமைப்பான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் தொண்டர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நாய்கள் மீட்கப்பட்டது.
போலீஸ் கொடுத்த தகவலின் படி, செக்டர் 109 குர்கானில் அமைந்துள்ள ஒரு சொகுசு பகுதியில் ஒரு தந்தை-மகன் இருவரும் வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய்களை தங்கள் வீட்டு பனிப்பெண்ணை வைத்து கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், புதன்கிழமை, அந்த பெண் விலங்குகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்று, பிளாட்டுக்கு திரும்பும் போது, அந்த இரண்டு நாய்களில் ஒன்றை லிஃப்ட் தரையில் மூன்று முறை தூக்கி கொடூரமாக தாக்கியுள்ளார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, விலங்குகள் நல அமைப்பான பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) தொண்டர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டன. இதற்கிடையில், PFA இன் உறுப்பினர் மஞ்சுநாத் காமத், இது விலங்குகளுக்கு எதிரான கொடுமை வழக்கு என்றும், காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக நாய்களின் உரிமையாளர்கள் புகார் அளிப்பார்கள் என்றும் கூறினார்.
மறுபுறம், “எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எங்களுக்கு ஏதேனும் புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என சமூகத்தின் குடியுரிமை நல சங்கம் (RWA) சம்பவம் பற்றிய எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Insane cruelty towards the voiceless:
This has happened in Raheja Atharva, sector 109 gurgaon
Owners was completely unaware. Think twice before you handover ur kiddo to any maid or dog walkers
Owner refused to handover the maid or fire her. Do notice the face is very clear. pic.twitter.com/jqf1SdGd8v— The Pets Gallore (@thepetsgallore) April 12, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024