வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்தகாற்றழுத்ததாழ்வுநிலை உருவாக வாய்ப்பு எனவும் மே 23ல் உருவாகும்காற்றழுத்ததாழ்வுநிலை அடுத்த 5 நாளில்தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தகாற்றழுத்ததாழ்வுநிலைபுயலாக மாறுமா என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் குஜராத்தில் டவ்- தே புயல் கரையை கடந்தது. இந்த புயலை தொடர்ந்து வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.