தவறாக பரவிய தகவல் ! ரயில் முன் பாய்ந்து புதுமண தம்பதி தற்கொலை ..!

நிஜாமாபாத் : மாவட்டம் பொத்தன்கல் பகுதியில் புதிதாக திருமணமான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிபேட் மண்டலம், ஃபகிராபாத்-மிட்டாபூர் இடையே இளம் தம்பதி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.
அவர்கள் அப்பகுதியின் ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்பீ வீடியோ ஒன்றை எடுத்து தங்கள் தொடர்புடையவர்கள் மீது, தவறான தகவல்களை பரப்பி தங்களுக்கு பல்வேறு மன அழுத்தங்களை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி தற்கொலைக்கு காரணம் இது தான் என பேசி அந்த வீடியோவை சைலஜா கோடகிரி எஸ்ஐக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
அந்த தம்பதியினர் கோதாவரி நதிக்கு தற்கொலை செய்ய வருவதாக தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் பசரா பாலத்திற்கு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால், போலீசார் அந்த தொலைபேசி எண்ணை பின்தொடர்ந்து, பகீராபாத் மற்றும் மிட்டாபூர் கிராமத்துக்கிடையிலான ரயில் பாதையில் அவர்களின் உடல்களை கண்டறிந்தனர்.
మా చావుకు పిన్నే కారణమని సెల్ఫీ వీడియో చేసి దంపతుల సూసైడ్
నిజామాబాద్ – పోతంగల్ మండలం హెగ్డోలికి చెందిన అనిల్(28), శైలజ(24)కు ఏడాది కిందట పెళ్లైంది. అయితే ఆ దంపతులు రైలు కిందపడి ఆత్మహత్య చేసుకున్నారు
కాగా వారు చనిపోయేముందు పోలీసులకు సెల్ఫీ వీడియో పంపారు.. తన పిన్ని చేసిన… pic.twitter.com/4uIazuUa1k
— Telugu Scribe (@TeluguScribe) July 16, 2024
மேலும், அந்த தம்பதி தங்கள் மரணத்திற்கு பினா என்ற தொடர்புடையவரை குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட அனில் – சைலஜா தம்பதிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் தான் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025