மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்.!

The Indian Meteorological Department has warned fishermen to return to shore as a new depression forms in the Bay of Bengal.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் கடலுக்கு சென்றுள்ள மீன்வர்கள் கரை திரும்ப வேண்டும் என்று ந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வருகின்ற மே 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 5 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறினால், அது தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு, ஏனெனில்  மே இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்பதால் புயல் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் கடலுக்கு சென்றுள்ள மீன்வர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை மீன்வர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.