கட்சிக்கு இழப்பு!திறம்பட பணியாற்றிவர்-மறைவு வேதனை தருகிறது..முதல்வர் உருக்கம்

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

இந்நிலையில் சென்னை காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் காமராஜ், உதயராஜ் ஆகியோரும் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிப்பணியில் திறம்பட பணியாற்றியவர் அமைச்சர் துறைக்கண்ணு அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.இந்த இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என்று உருக்கம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.