இந்தியா -சீனா எல்லை பிரச்சினை ! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம்

India-China LAC standoff: Defence Minister Rajnath Singh to make a statement in Rajya Sabha

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று  மாநிலங்களவையில் ‘கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே பதற்றம் நிலவியது.இந்த பகுதிகளில் இரு தரப்பும் ராணுவ வீரர்களை தொடர்ச்சியாக குவித்து வந்தனர்.கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் , வீரர்கள் மற்றும் தளவாடங்களை திரும்பப்பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக  அலுவலகம்  தெரிவித்துள்ளது.