இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு;34,167 பேர் குணமடைவு..!

In India, 26,964 people have been affected by corona in the last 24 hours; 34,167 have recovered ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 383 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 800 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,35,31,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 383 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,45,768 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 34,167 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 82,65,15,754 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு;34,167 பேர் குணமடைவு..!